இந்தியா

நாத்தனாருடன் சண்டை..! அலமாரியில் இருந்த 2 வயது குழந்தையின் சடலம்..! இப்படியும் ஒரு கொடூர பெண்..!

Summary:

Women killed 2 years old boy for family problem

கணவனின் தங்கையுடன் ஏற்பட்ட தகாரில்  பெண் ஒருவர் 2 வயது குழந்தையை கொலை செய்து அலமாரியில் மறைத்துவைத்திருந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் பிர்பம் மாவட்டம் காஷிபூர் கிராமத்தை சேர்ந்தவர் தாஜ்மிரா பீவி. இவருக்கும், இவரது கணவரின் தங்கைக்கும் இடையே நீண்ட காலமாக குடும்பப்பகை இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கணவரின் தங்கையின் இரண்டு வயது ஆண்குழந்தை தனியாக விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்த தாஜ்மிரா பீவி, குழந்தையை தூக்கிச்சென்று கொடூரமாக கொலை செய்து குழந்தையின் உடலை வீட்டின் அலமாரிக்குள் மறைத்துவைத்துள்ளார்.

இதனிடையே குழந்தையை காணவில்லை என குழந்தையின் பெற்றோர் அங்கும் இங்கும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததை அடுத்து பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் தாஜ்மிரா பீவிவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தாஜ்மிரா பீவிதான் குழந்தையை கொலை செய்து அலமாரியில் மறைத்துவைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து போலீசார் தாஜ்மிரா பீவிவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement