இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
எவ்வளோ பாசம் இருந்திருக்கும்!! பாவங்க அந்த பொண்ணு!! எரிந்துகொண்டிருந்த தந்தையின் சிதையில் குதித்த இளம்பெண்.. தீக்காயங்களுடன் மீட்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்துபோன தந்தை ஒருவரை தீயூட்டும்போது அதே தீயில் குதித்த அவரது மகள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் தாமோதர தாஸ் ஷர்தா. இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டநிலையில் தாமோதர தாஸ் தனது மூன்று மகள்களுடன் வாழ்ந்துவந்துள்ளார். இந்நிலையில் தாமோதர தாஸ்க்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் தாமோதர தாஸ் சமீபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் அதிகாரிகள் முன்னிலையில் முறைப்படி மயானத்தில் வைத்து தீயூட்டப்பட்டது. அப்போது தனது தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க வேண்டும் என அனுமதி கேட்டு, இறுதிச்சடங்கில் பங்கேற்ற தாமோதர தாஸின் இளைய மகள் சந்திரா ஷர்தா யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தனது தந்தையின் உடல் எரிந்துகொண்டிருந்த நெருப்பில் குதித்துவிட்டார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உடலில் 70 சதவீத காயங்களுடன் சந்திரா ஷர்தா தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.