இந்தியா

காசு இல்லை.. இதை வச்சுக்கோங்க.. பெண் கொடுத்ததை பார்த்து அதிர்ந்துபோன போலீசார்..

Summary:

போக்குவரத்துக்கு காவலரிடம் பெண் ஒருவர் அபராத தொகைக்கு பதிலாக தாலியை கழட்டி கொடுத்த சம்பவம்

போக்குவரத்துக்கு காவலரிடம் பெண் ஒருவர் அபராத தொகைக்கு பதிலாக தாலியை கழட்டி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெல்காவி மாவட்டத்தை சேர்ந்த பாரதி விபூதி (30) என்ற பெண் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் மார்கெட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது பாரதியின் கணவர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓடிச்சென்றதால், அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக்கு போலீசார் ஒருவர் வண்டியை நிறுத்தி, 500 ரூபாய் அபராதம் செலுத்தும்படி கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாரதி, அபராதம் செலுத்த அவ்வளவு தொகை தங்களிடம் இல்லை என கூறியுள்ளார். இருப்பினும் போக்குவரத்துக்கு போலீசார் அபராதம் செலுத்தியே ஆகவேண்டும் என கூறியநிலையில், தனது கணவரை மீட்க வேறு வழியில்லாமல் தனது கழுத்தில் இருந்த தாலியை கழட்டி கொடுத்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போக்குவரத்துக்கு போலீசார், உடனே மேலதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். பின்னர் மூத்த அதிகாரிகளின் அறிவுரைக்கு பின் போலீசார் தாலியை பாரதியிடமே ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Advertisement