கணவர் இறந்து மூன்று வருடங்கள் கழித்து தாயான பெண்! ஒரு உண்மை சம்பவம்!

கணவர் இறந்து மூன்று வருடங்கள் கழித்து தாயான பெண்! ஒரு உண்மை சம்பவம்!


Women gave birth to new child after 3 years of her husband dead

பெங்களூருவை சேர்ந்த தம்பதிகள் கவுரவ் மற்றும் சுப்பிரியா. மார்க்கெட்டிங் ஆலோசகர்களாக பணியாற்றிவந்தனர். இந்நிலையில்  இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் இவர்களது சிகிச்சை தோல்வியடைந்ததை அடுத்து செயற்கை முறையில் கருத்தரிக்க முடிவு செய்தனர். அதற்கான சிகிச்சையை மும்பையில் உள்ள மருத்துவமனையில் மேற்கொண்டனர்.

இந்நிலையில் எதிர்பாராத கார் விபத்தில் கவ்ரவ் மரணமடைந்தார். எனினும் கவ்ராவின் விந்தணு சேகரிக்கப்பட்டு உரை நிலையில் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், செயற்கை கருத்தரிப்பு செய்து குழந்தை பெற விரும்பிய சுப்ரியா, அது தொடர்பாக மருத்துவரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சுப்ரியாவின் கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு செயற்கை கருத்தரிப்பு முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

Test tube baby

அணைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததால் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். கவ்ராவின் விந்தணுவையும் சுப்ரியாவின் கரு முட்டையையும் சேர்த்து வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், 10 மாதங்களுக்குப் பின்னர் வாடகை தாய் மூலமாக சுப்ரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த சுப்ரியா இதுகுறித்து சுப்ரியா கூறுகையில்,

யானது கணவர் மூலம் நான் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தேன் அனால் அது முடியவில்லை. தற்போது ஏன் மகன் எனது கணவர் முக சாயலில் உள்ளன என கண்ணீர்மல்க தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகைல் நாங்கள் இருவரும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும், இன்னொரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று விரும்பினோம். அவரது விருப்பப்படி  ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பேன்’ என தெரிவித்துள்ளார்.