போலீசாரின் சட்டையை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்! வைரலாகும் வீடியோ!



women-fight-with-cop-in-telungana

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது 190 நாடுகளில் தீவிரமாக  பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில்,  இதுவரை 2900பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் மக்கள் யாரும் வீட்டை விட்டு செல்லக் கூடாது எனவும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ்வபோது அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Coronovirus

இந்நிலையில் தெலுங்கானா ஐதராபாத் லாலாபட் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது ஒரே பைக்கில் பெண் ஒருவர் தனது மகன் மற்றும் மற்றொருவருடன் வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது போலீசார்கள் அவர்களை தடுத்து நிறுத்தி,  ஊடரங்கை மீறியதற்காக வழக்குப்பதிவு செய்து பைக்கை பறிமுதல் செய்துள்ளனர். 

இந்நிலையில் ஆத்திரமடைந்த அந்த பெண், பணியில் இருந்த போலீஸ் அதிகாரியின் சட்டையை பிடித்து தகராறு செய்துள்ளார். மேலும் அந்த இளைஞர் அருகிலிருந்த கம்பை எடுத்து தாக்கவும் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவிவருகிறது.