கொஞ்சம் லேட் ஆகியிருந்தாலும் உயிரே போயிருக்கும்!! ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்.. தாவிச் சென்று காத்த காவலர்..!

கொஞ்சம் லேட் ஆகியிருந்தாலும் உயிரே போயிருக்கும்!! ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்.. தாவிச் சென்று காத்த காவலர்..!


Women falling from moving train in Jharkhand Ranchi railway station

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இளம் பெண் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது கால் தவறி கீழே விழுந்தநிலையில், அந்த பெண்ணை அங்கிருந்த ரயில்வே காவலர் காப்பாற்றும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

குறிப்பிட்ட சம்பவமானது நேற்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ரயில் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. இளம் பெண் ஒருவர் பெரிய பேக்குடன் ஓடும் ரயிலில் ஏற முயல்கிறார். அப்போது அவரது கால்கள் இடறி அவர் ஓடும் ரயிலில் சாய்ந்தவாறு உயிருக்கு போராடுகிறார்.

இதனை பார்த்த அங்கிருந்த ரயில்வே காவலர் வினோத் குமார் என்பவர், உடனே ஓடிச்சென்று அந்த பெண்ணை காப்பாற்றுகிறார். காவலர் சிறிது தாமதமாக பாத்திருந்தால் அந்த பெண் ரயிலில் சிக்கி பெரிய விபத்தை சந்தித்திருக்க நேரிட்டிருக்கும். ஆனால் நொடி பொழுதில் அந்த காவலர் அந்த பெண்ணை காப்பாற்றியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகம் வைரலாகிவருகிறது. பலரும் ரயில்வே காவலருக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.