இந்தியா

குறையும் கொரோனா! கேரளாவில் நடனமாடி அசத்திய பெண்மருத்துவர்கள்! எதற்காக தெரியுமா?

Summary:

Women doctors dance in kerala

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவிவருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியநிலையில் இதுவரை 12000க்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் கொரோனோவை கட்டுபடுத்த நாடு முழுவதும் மே 3வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா இந்தியாவில் பரவிய துவக்கத்தில் கேரளாவிலேயே பாதிப்பு அதிகளவில் இருந்தது. ஆனால்  தற்போது கேரளாவில் தீவிர நடவடிக்கைகளுக்குப் பிறகு பெருமளவில் பாதிப்புகள் குறைந்து கட்டுக்குள் வருகிறது.

இந்த நிலையில் திருவனந்தபுரம்  எஸ்.கே. மருத்துமனையில் பணியாற்றும் 24 பெண் மருத்துவர்கள், பக்திப் பாடலுக்கு அசத்தலாக நடனமாடியும், விளக்கை ஏந்தி வருவது போன்றும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.  அவர்கள் லோகம் முழுவன் சுகம் பகரன்  என்ற பக்திப்பாடலுக்கு, பணி முடிந்து வீடு திரும்பிய பிறகு நடனமாடியுள்ளனர்.

இந்த வீடியோவை கொரோனா எதிர்த்து போராடி பணியாற்றுவோருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும், ஒற்றுமை மற்றும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் விதமாகவும் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


Advertisement