திருமணம் செய்துகொள்வோம்! இளைஞர்களை மயக்கி 44வயது பெண் செய்த மோசடி! அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்!



women-cheated-youngman-by-marriage-site-for-money

ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் மாளவிகா தேவ்டி. 44 வயது நிறைந்த இவரது மகன் வெங்கடேஸ்வரா பிரணவ் லலித் கோபால். 22 வயது நிறைந்த இவர் படித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து திருமண இணையதளத்தில் கீர்த்தி மாதவேணி என்ற பெயரில் போலியான ஐடி ஒன்றை தொடங்கியுள்ளனர். மேலும் அதில் மணமகள் போல் போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மாளவிகா வெளிநாட்டில் உள்ள பல இளைஞர்களிடம் திருமணம் செய்துகொள்வதாக, அவர்களை கவரும் வகையில் பேசி பண மோசடி செய்து வந்துள்ளார். இவ்வாறு அவர் சமீபத்தில் கலிபோர்னியாவில் பணிபுரிந்துவந்த வருண் என்பவரிடமும் பேசி பழகியுள்ளார்.

cheating

அப்பொழுது அவர் வருணிடம் தான் பெரிய மருத்துவர், எனக்கு நிறைய சொத்துக்கள் உள்ளது. ஆனால் என் தந்தை இறந்தபிறகு என் பெயரில் உள்ள சொத்துக்களை மாற்றித்தருமாறு தாய் கொடுமை படுத்திவருகிறார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதற்கு 65 லட்சம் பணம் தேவைப்படுகிறது. வழக்கு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வோம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய வருண் அவர் கேட்ட பணத்தை மாளவிகாவிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் அதற்குப் பின்னர் வருணால் மாளவிகாவை தொடர்புகொள்ள முடியவில்லை. இந்நிலையில் தான் ஏமாந்ததை உணர்ந்த வருண் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் மாளவிகா மற்றும் அவரது மகன் இருவரையும் கைது செய்தனர். இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.