நள்ளிரவு 2 மணிக்கு தாக்கப்பட்ட பெண்கள்.. விடுதி உரிமையாளர் மகனின் அதிர்ச்சி செயல்.. பதறவைக்கும் வீடியோ.!
விடுதி உரிமையாளரின் மகன் அத்துமீற முயன்ற நிலையில், அதுகுறித்து புகார் அளித்த பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
போனில் அழைத்து தொல்லை:
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ராயாக்ராஜ் மாவட்டம், ஷகர்கர்க், ஷிவ்குடி பகுதியில் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்கியிருக்கும் அமேதி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண் மத்திய அரசின் போட்டித்தேர்வுக்கு தயாராகி வருகிறார். விடுதியின் உரிமையாளரின் மகன் சிவம் திபேதி. கடந்த மே 18ம் தேதியில் இருந்து சிவம் 27 வயது பெண்ணை பலமுறை செல்போனில் அழைத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: சிகிரெட் பிடிக்க கூடாதுன்னு சொல்ற? சாவு.. இளம்பெண்ணுக்கு ரயிலில் நேர்ந்த சம்பவம்.. பகீர் காட்சிகள்.!
ஜாமினில் வந்தார்:
பெண்மணி அதனை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், ஒருநாள் இரவில் அறைக்கு வந்து தொல்லை செய்துள்ளார். இதனால் இவ்விசயம் குறித்து பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதன்பேரில் கைது செய்யப்பட்ட சிவம் சிறையில் அடைக்கப்பட்டார். பின் அவர் ஜாமினில் விடுதலையாகி வெளியே வந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் பெண்ணுக்கு தொடர்ந்து தொடர்பு கொண்டு இருக்கிறார்.
-2r7wk.jpg)
தாக்குதல் சம்பவம்:
அந்த பெண் ஷிவமின் அழைப்பை ஏற்காத நிலையில், நள்ளிரவு சுமார் 2 மணியளவில் குடிபோதையில் பெண்ணின் அறைக்குச் சென்றவர் அவரை தாக்கி இருக்கிறார். பெண் எழுப்பிய அபயக்குரல் கேட்டு மற்றொரு பெண்ணும் உதவிக்கு வந்த நிலையில், அவரையும் தாக்கி இருக்கிறார். இவர்களின் சத்தம் கேட்டு பெண்ணின் தாய் வந்து தடுத்தும் பலனில்லை. இறுதியாக இவர்களுடன் தங்கியிருக்கும் பெண் ஒருவர், சம்பவத்தை வீடியோ எடுத்தபடி காவல்துறைக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலை அறிந்ததும் வந்த காவல்துறையினர், ஷிவமை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பெண்கள் தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதிர்ச்சி வீடியோ:
A case of assault involving two female students living in a lodge has come to light in Prayagraj, Uttar Pradesh.
— Hate Detector 🔍 (@HateDetectors) May 21, 2026
A video of the incident is going viral on social media, showing a man beating two female students and dragging one of them by her hair, while a woman is also seen in… pic.twitter.com/kfKjZ8isnM
இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!