இந்தியா

16 வயது சிறுவனை கடத்தி பாலியல் உறவு வைத்த பெண்! சிறுவனின் பதறவைக்கும் வாக்குமூலம்!

Summary:

women arrest for young boy kidnapped


மும்பை நேரு நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த ஜூன் மாதம் கடைக்கு சென்றுவிட்டு மாலை வரை வீடு திரும்பவில்லை. நீண்ட நேரம் சிறுவனை காணாததால் அவனது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் சிறுவன் கிடைக்கவில்லை. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தநிலையில் அதேபகுதியை சேர்ந்த 38 வயது பெண்ணை காணவில்லை என அவரது கணவரும் அதே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காணாமல் போன அந்த பெண்ணுக்கும், சிறுவனுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. 

arrest க்கான பட முடிவு

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில் காணாமல் போன அந்த பெண் ஒரு வீட்டில் சிறுவனுடன் வசித்துவந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த பெண் இருக்கும் வீட்டிற்கு சென்று பெண்ணை கைது செய்தனர். அந்த பெண்ணுடன் இருந்த 16 வயது சிறுவனை மீட்டனர்.

இதனையடுத்து சிறுவன் போலீசாரிடம் கூறுகையில், தன்னை அந்த பெண் கடத்தி சென்று கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்ததாக கூறினான். இதனையடுத்து சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையான ‘போக்சோ’ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் அந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Advertisement