ஈரக்குல நடுங்குதே.. உறங்கிக் கொண்டிருந்த கணவனை துண்டு துண்டாக வெட்டிய பெண்... பகீர் உண்மை.!woman-who-killed-her-husband-and-chopped-off-his-body-w

உத்திரபிரதேச மாநிலத்தில் கணவரை கட்டிப்போட்டு கொலை செய்து அவரது  உடலை துண்டு துண்டாக வெட்டி  கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மனைவியை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பால் மற்றும் துலாரோ தேவி தம்பதியினருக்கு சோம்பால் என்ற 29 வயது மகன் இருக்கிறார். இந்நிலையில் தனது தந்தையை மூன்று நாட்களாக காணவில்லை என்றும் தனது தாய் மீது சந்தேகம் இருப்பதாகவும் சோம்பால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் துலாரோ  தேவியை காவல்துறையினர் விசாரித்ததில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன.

Indiaராம்பால் மற்றும் துலாரோ தேவி  இருவருமே கள்ளத்தொடர்பில் வேறு வேறு நபர்களுடன் இருந்த நிலையில்  இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. ராம்பால் மது அருந்திவிட்டு தனது மனைவியை உடல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த துலாரோ தேவி தனது கணவர் உறங்கிக் கொண்டிருக்கும்போது அவரது கை கால்களை கட்டிலோடு சேர்த்து கட்டி மண்வெட்டியின் கைப்பிடியால் அடித்து கொலை செய்துள்ளார். மேலும் கொலை செய்யப்பட்ட கணவரின் உடலை மறைக்க காதலன் இடம் உதவி கோரி இருக்கிறார்.

Indiaஇதனைத் தொடர்ந்து காதலனின் அறிவுரை அடிப்படையில் ராம்பாலின் கை, கால்கள்,  தலை, உடல் என ஐந்து பாகங்களாக வெட்டி  அருகில் உள்ள கால்வாயில் வீசி இருக்கிறார். இந்த சம்பவங்களை அவர் காவல்துறையிடம் ஒப்புக் கொண்டார். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பகாரியா கிராமத்தில் உள்ள கால்வாயில் தேடுதல் பணியை தொடங்கிய போலீசார் கால்வாயில் கிடந்த பை ஒன்றில் இருந்து ராம்பாலின் கைகள், கால்கள் மற்றும் தலையை மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து துலாரோ தேவி மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.