அஜித்திற்கு நயன்தாரா கொடுத்த பெரிய சர்ப்ரைஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ காட்சி!
"நான் உயிரோடிருக்கும் வரை நிலம் கிடையாது..." பிடிவாதமாக நின்ற தாய்.!! கணவருடன் சேர்ந்து தாயைக் கொன்ற மகள்.!!
தெலுங்கானா மாநிலத்தின் ஜனகாம் மாவட்டம், பாலகுர்த்தி மண்டலம் பெத்ததண்டா பகுதியை சேர்ந்த பாகவதர் லட்சுமி(45) கணவர் இறந்து 20ஆண்டுகளான நிலையில் கூலி வேலை செய்து தன் ஒரே மகள் சங்கீதாவை வளர்த்தார். இந்நிலையில் சாதாப்புரம் கிராமத்தைச் சேர்ந்த வீரன்னா என்பவரை மகள் விரும்பியதால் காதல் திருமணம் செய்து வைத்தார். இதற்கு வரதட்சணையாக தன்னிடமிருந்த 3 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கரை விற்று வரதட்சணை வழங்கியுள்ளார்.
இதற்கடுத்து மீதமுள்ள ஒரு ஏக்கரில் அரை ஏக்கரை கணவரின் சகோதரிகளுக்கு கொடுத்து விட்டு மிச்சமுள்ள அரை ஏக்கரை வைத்து விவசாயம் செய்து வந்தார். அந்த அரை ஏக்கரை தனக்கே கொடுக்குமாறு மகள் வற்புறுத்தியுள்ளார். அதற்கு நான் உயிருடன் இருக்கும் வரை நிலத்தை கொடுக்க முடியாது என்றும் இறந்த பின் உங்களுக்கே சேரும் என கூறியுள்ளார்.

இதனால் தாய் இருக்கும் வரை நிலத்தை பெற முடியாது என்று கணவனுடன் சேர்ந்து நள்ளிரவில் தலையணை முகத்தில் அழுத்தி தாயை கொன்றுள்ளார் சங்கீதா. பின்னர் ஒன்றும் தெரியாதது போல் கணவருடன் சேர்ந்து நாடகமாடி அழுதுள்ளார், இந்நிலையில் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அருகிலுள்ளவர்கள் காவல் துறையில் புகாரளித்துள்ளனர். இதற்கடுத்து போலீசார் விசாரணையில் சொத்துக்காக மகள் மற்றும் அவரது கணவர் சேர்ந்து தாயை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
இதையும் படிங்க: கணவர் இல்ல! உங்க கூடவே இருக்கேன்! இப்படி சொல்லியே 6 பேரை திருமணம் செய்த கல்யாண ராணி! அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி...
இதையும் படிங்க: "சிக்னலில் நடந்த குடும்ப சண்டை... " மனைவி மீது கொலை வெறி தாக்குதல்.!! கணவன் கைது.!!