சித்தப்பாவுடன் கள்ளக்காதல்... மனைவி போட்ட மெகா பிளான்.!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்.!!



woman-in-ema-arrested-for-planned-to-murder-husband

கர்நாடக மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியிலுள்ள இண்டி நகரில் வசித்து வருபவர் பீரப்பா பூஜாரி. இவருக்கு சுனந்தா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவரது மனைவி சுனந்தா, சித்தப்பா என்ற நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்திருக்கிறார். அவர்களது கள்ள உறவு பற்றியறிந்த பீரப்பா இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருக்கிறார் சுனந்தா.

India

அவர்களது திட்டத்தின் படி சுனந்தா, கள்ளக்காதலன் சித்தப்பா ஆகியோர் மற்றொரு நபருடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பீரப்பாவை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றுள்ளனர். அப்போது அவர் சத்தம் போட்டதால் அருகிலிருந்தவர்கள் உதவிக்கு ஓடி வந்தனர். இதனைத் தொடர்ந்து கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: காம வெறி பிடித்த மாமனார்... ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் படுகொலை.!!

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த கணவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மனைவி சுனந்தாவை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தப்பியோடிய 2 பேரையும் காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

இதையும் படிங்க: கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு... கணவன், மகள் கொடூர கொலை.!! காதல் ஜோடி வெறி செயல்.!!