ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு... கணவன், மகள் கொடூர கொலை.!! காதல் ஜோடி வெறி செயல்.!!
தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலில் இருந்த பெண் தனது காதலன் உதவியுடன் கணவன் மற்றும் கணவனின் மகளை கொலை செய்து போலீஸிடம் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கவிதா என்ற பெண் மற்றும் அவரது காதலனை காவல்துறை கைது செய்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஒடிதலா கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மனைவி இறந்து விட்ட நிலையில் தனது 2 மகள்களுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் கவிதா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார் குமாரசாமி. மேலும் கடந்த 5 ஆண்டுகளாக அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்படிருந்தார். இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவி கவிதாவிற்கு, ராஜ்குமார் என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது. கவிதாவின் கள்ளத்தொடர்பு பற்றியறிந்த குமாரசாமி அவரை கண்டித்திருக்கிறார்.

மேலும் காதலை கைவிடுமாறு கவிதாவிடம் வற்புறுத்தியிருக்கிறார் குமாரசாமி. இதனால் ஆத்திரமடைந்த கவிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜ்குமார் ஆகியோர் சேர்ந்து ஜூன் 25ஆம் தேதி குமாரசாமியை கொலை செய்துவிட்டு அவர் உடல் நலக்குறைவால் மரணமடைந்ததாக அனைவரையும் நம்ப வைத்தனர். இந்நிலையில் குமாரசாமியின் மகள் வர்ஷினி தங்கள் மீது சந்தேகப்படுவதையறிந்த கள்ளக்காதல் ஜோடி அவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறது. இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி ராஜ்குமார், வர்ஷினியை கொலை செய்து அவரது உடலை அரசு ஆஸ்பத்திரியின் பின்புறம் புதைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: "மாமியார் வீட்டில் உல்லாசம்..." மகள், காதலனை தீர்த்து கட்டிய தந்தை.!!
பின்னர் கடந்த 25 ஆம் தேதி புதைத்த உடலை தோண்டி எடுத்த ராஜ்குமார் அதனை சாலையில் போட்டு சென்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து சாலையில் பிணம் கிடப்பதையறிந்த காவல்துறையினர் அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக கவிதாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கவிதா தனது மகளை கொலை செய்து விட்டதாக கதறி அழுதிருக்கிறார். எனினும் அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் கவிதாவிடம் நடத்திய தீவிர விசாரணையில் கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது கணவர் மற்றும் அவரது மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தது.
இதையும் படிங்க: அண்ணியுடன் முறை தவறிய காதல்... இளைஞர் படுகொலை.!! அண்ணன் கைது.!!