கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்... காலை வாரிய காதலன்.!! பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.!!



woman-commits-suicide-lover-delaying-marriage

கர்நாடக மாநிலத்தில் காதலன் திருமணத்தை தள்ளிப் போட்டதால் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவரும் அதே பகுதியை சேர்ந்த லதா என்ற பெண்ணும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோரும் சம்மதித்துள்ளனர். இதனால் விரைவிலேயே தனது காதலனை கரம் பிடிக்கலாம் என்ற கனவுடன் இருந்திருக்கிறார் லதா.

India

ஆனால் அவரது காதலன் ரஞ்சித்தின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் அவர் லதாவுடனான திருமணத்தையும் தள்ளிப் போட்டிருக்கிறார். இது லதாவிற்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காதலனிடம் கேட்டபோது இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தியடைந்த லதா நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையும் படிங்க: வாழ்வே மாயம்... ரூம் போட்டு தற்கொலை.!! புது மாப்பிளைக்கு நேர்ந்த சோக முடிவு.!!

இதனைத் தொடர்ந்து அவரது சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கல்யாணம் முடிந்த 6 மாதத்தில் சோகம்... நிராகரித்த கணவன்.!! மனைவி எடுத்த விபரீத முடிவு.!!