கல்யாணம் முடிந்த 6 மாதத்தில் சோகம்... நிராகரித்த கணவன்.!! மனைவி எடுத்த விபரீத முடிவு.!!
திருப்பூர் மாவட்டத்தில் கணவன் சினிமாவிற்கு அழைத்துச் செல்ல மறுத்ததால் கோபமடைந்த மனைவி விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள பாண்டியாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சௌமியா(23) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இவர்களது கல்யாண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் தன்னை சினிமாவிற்கு அழைத்துச் செல்லுமாறு ஜீவாவிடம் வற்புறுத்தியிருக்கிறார் அவரது மனைவி சௌமியா. எனினும் வேலை அதிகமாக இருந்ததால் பல்வேறு காரணங்களை சொல்லி மனைவியின் ஆசையை நிராகரித்து வந்திருக்கிறார் ஜீவா. கணவரிடம் தொடர்ந்து கூறியும் தன்னை சினிமாவிற்கு அழைத்துச் செல்லாததால் விரக்தியடைந்த சௌமியா நேற்று வீட்டில் ஆளில்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படிங்க: வாழ்வே மாயம்... ரூம் போட்டு தற்கொலை.!! புது மாப்பிளைக்கு நேர்ந்த சோக முடிவு.!!
இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட சௌமியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் கணவன் சினிமாவிற்கு அழைத்துச் செல்லாததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: "மாமியார் வீட்டில் உல்லாசம்..." மகள், காதலனை தீர்த்து கட்டிய தந்தை.!!