இந்தியா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாமனாரை மருமகள் என்ன செய்துள்ளார் பாருங்கள்! ஆச்சர்யம் ஆனால் உண்மை

Summary:

ஒடிசாவில் கோரோனாவால் பாதிக்கப்பட்ட மாமனாரை மருமகள் முதுகில் சுமந்து மருத்துவமனை சேர்த்துள்

ஒடிசாவில் கோரோனாவால் பாதிக்கப்பட்ட மாமனாரை மருமகள் முதுகில் சுமந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

ஒடிசாவை சேர்ந்த சூரஜ் என்பவர் வேலை காரணமாக வெளியூரில் தங்கியுள்ளார். அவரது மனைவி நிகாரிகாவும் சூரஜின் 75 வயது தந்தை துலேஸ்வர் தாஸ் மட்டும் சொந்த ஊரில் வசித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் துலேவஸ் தாஸிற்கு கொரோனா பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதனை தெரிந்துகொண்ட நிகாரிகா எந்த வண்டியையும் எதிர்பார்க்காமல் வயதான மாமனாரை முதுகில் சுமந்தபடியே மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவ துவங்கியது. இதனை அறிந்த பலரும் நிகாரிகாவின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதில் சோகமான செய்தி என்னவெனில் நிகாரிகாவிற்கும் கொரோனா பாஸிட்டிவ் என தெரியவந்துள்ளது. தற்போது இருவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement