இந்தியா

தேங்கி நின்ற மழை நீரில் 2 மாத கைக்குழந்தையுடன் விழுந்த பெண்..! குழந்தையுடன் நீரில் தத்தளித்த அதிர்ச்சி வீடியோ.

Summary:

woman-2-month-old-child-fell-into-open-pit-in-hyderabad

ஹைதராபாத்தில் பெய்த மழையில், சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்த நிலையில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பள்ளத்தில் விழும் காட்சி பார்ப்போரை பதற வைத்துள்ளது.

காரில் இருந்து இறங்கி இரண்டு பெண்கள் வெளியே வருகின்றனர். அதில், ஒரு பெண் தனது கையில் கைக்குழந்தையுடன் மழைநீர் தேங்கியிருந்த சாலையை கடக்க முயல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் கைக்குழந்தையுடன் உள்ளே தவறி விழுகிறார்.

குழந்தை தண்ணீரில் மூழ்கிவிடாதபடி குழந்தையை மேலே தூக்கி பிடித்து அகலமான குழியில் தத்தளிக்கிறார் அந்த பெண். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த குழந்தையையும், அந்த பெண்ணையும் மீட்கின்றனர். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement