ஊரடங்கு உத்தரவால் கணவனை வெளியே செல்லவிடாமல் தடுத்த மனைவி! மீறிய கணவன்! மனைவி எடுத்த விபரீத முடிவு!
ஊரடங்கு உத்தரவால் கணவனை வெளியே செல்லவிடாமல் தடுத்த மனைவி! மீறிய கணவன்! மனைவி எடுத்த விபரீத முடிவு!

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மங்களூரு அருகே தனது பேச்சை கேட்காமல் கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றதால் மனைவி தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவந்த நிலையில், மத்திய அரசு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊரடங்கை கடைபிடித்து வருகிறது.
ஊரடங்கை மதிக்காமல், வெளியே சுற்றி திரிபவர்களை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், மங்களூரு அருகே பண்ட்வால், பார்லியா பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் அலி என்ற ஆட்டோ டிரைவர் அவரது மாமா வீட்டிற்கு செல்வதற்கு கிளம்பியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அவரது மனைவி ரமீஷா பானு தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் அதை கேட்காமல் கணவர் அப்பாஸ் அலி அருகிலுள்ள மாமா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரமீஷா பானு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.