இந்தியா

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன்! நண்பருடன் சேர்ந்து மனைவியின் கொடூரச்செயல்!

Summary:

wife punishment to her husband for doubt


அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் பவிஷ்யா. இவர் மும்பையில் உள்ள வசாய் பகுதியில் மனைவி ராணியுடன் வசித்து வருகிறார். ராணி அதே பகுதியில் வசித்து வரும் நாயக் என்பவருடன் நட்பாக பழகியுள்ளார். 

இந்தநிலையில் நாயக் அடிக்கடி வீட்டிற்கு வந்தது சென்றதால், பவிஷ்யாவிற்கு மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாயக்குடன் தனது மனைவி தகாத உறவு வைத்திருப்பதாக நினைத்து இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது, நாங்கள் நண்பர்கள் தான் என்று ராணி கூறினாலும், பவிஷ்யாதொடர்ந்து தன் மனைவி மீது சந்தேகப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமையன்று வழக்கம் போல இருவரும் சண்டை போட்டுள்ளனர். அதன் பின் பவிஷ்யா உறங்கி விட்டார்.

தொடர்புடைய படம்

அப்போது நாயக்கை வீட்டுக்கு அழைத்த ராணி, அவர் உதவியோடு கணவனின் கால்களைக் கயிற்றால் கட்டி, சுத்தியலால் அவரை சரமாரியாகத் தாக்கி, மிளகாய்ப் பொடியை கணவரது கண்களில் தூவி, அடுப்பில் இருந்து கொதிக்கும் எண்ணெய்யை சட்டியுடன் தூக்கி வந்து கணவர் மீது ஊற்றியுள்ளார். 

வலி தாங்கமுடியாமல் துடித்த பவிஷ்யா அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் பின்னர் அப்பகுதி மக்கள் நாயக்கையும் குயின்சியாவையும் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 


Advertisement