இந்தியா உலகம்

சயனைடு கொடுத்து, கணவனை போட்டுத்தள்ளிய மனைவி.! விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி பின்னணி!!

Summary:

wife killed husband giving poison

கேரள மாநிலம் புனலூரை சேர்ந்தவர் சேம் ஆபிரகாம். இவரது மனைவி சோபி. சேம் ஆபிரஹாம்  ஆஸ்திரேலியாவில் உள்ள கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். மேலும் சோபி மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக பணியாற்றினார்.இவர்களுக்கு 4 வயது மகன் உள்ளார்.

 தங்கள் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வந்த சேம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து தனது கணவர் மாரடைப்பில் உயிரிழந்துவிட்டதாக சோபி தெரிவித்ததை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

 இதனை தொடர்ந்து இதுகுறித்து போலீசார் நடத்திய கடுமையான விசாரணையில், சோபி தனது கள்ளக்காதலன் அருண் என்பவருடன் சேர்ந்து சயனைடு விஷம் கொடுத்து ஆபிரகாமை கொன்றது தெரியவந்தது. அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, கேரளாவில் நர்சிங் படித்த போது அருண் என்ற என்ஜினீயருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அருணும் ஆஸ்திரேலியாவில் உள்ள  மெல்போர்னில் பணியாற்றி வந்ததால் இருவருக்கும் இடையே உள்ள பழக்கம் தொடர்ந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த சேம் ஆபிரகாம் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் சோபி தனது கள்ளக்காதலன் அருணுடன் சேர்ந்து சாப்பாட்டில் சயனைடு கலந்து கொடுத்து கொன்றுவிட்டு நாடகமாடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் சோபி மற்றும் அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்தகைய வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் சோபிக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அருணுக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
 


Advertisement