இந்தியா

கணவரின் உயிரை காப்பற்ற வாயோடு வாய் வைத்து உயிர் மூச்சு கொடுத்த மனைவி.! இறுதியில் நேர்ந்த பரிதாபம்.!

Summary:

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொர

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. 

ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு கடந்த சில நாட்களாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்தநிலையில் இந்தியாவிற்கு பல நாடுகளும் ஆக்சிஜன் ஏற்பாடு செய்து உதவி வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரேதச மாநிலத்தில் ஆக்ராவில் உள்ள அவாஸ் விகாஸ் பகுதியில் வசிக்கும் ரவி சிங்கால் என்பவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரது மனைவி ரேணு தனது கணவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆட்டோவில் செல்லும்பொழுதே தனது கணவருக்கு வாய் வழியாக தனது மூச்சுக்காற்றை ஊதி ஆக்ஸிஜன் கொடுத்துள்ளார். ஆனாலும் கணவரின் உயிரை அவரால் காப்பாற்ற முடியவில்லை. மூச்சுவிட முடியாமல் தவித்த ரேணுவின் கணவர் ரவி உயிரிழந்தார். கடைசி நொடி வரை தனது கணவனை காப்பாற்ற போராடிய மனைவியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


Advertisement