"படப்பிடிப்பின் போது ஹீரோ என்னை டார்ச்சர் செய்தார்" நித்யா மேனன் பகீர் தகவல்..
1 இல்ல நான்கு பெண்கள்..! குடும்பம் நடத்திய கணவரை அடித்து துவைத்த மனைவியின் குடும்பத்தார்.! பகீர் சம்பவம்.!
1 இல்ல நான்கு பெண்கள்..! குடும்பம் நடத்திய கணவரை அடித்து துவைத்த மனைவியின் குடும்பத்தார்.! பகீர் சம்பவம்.!

வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவனை மனைவி தனது குடும்பத்தாருடன் சேர்ந்து செருப்பால் அடித்து, காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து சில நாட்களில் சம்பத் அவரது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த பெண் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் ஷாப்பிங் மால் ஒன்றில் வேலை பார்த்து வந்த சம்பத் உடன் வேலை செய்யும் இளம்பெண் ஒருவரை தனது காதல் வலையில் வீழ்த்தி அவரை திருமணம் செய்து அதே பகுதியில் வீடு ஒன்றை எடுத்து ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்த தகவல் சம்பத்தின் முதல் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து அவர் தனது குடும்பத்தினருடன் சம்பத்தின் வீட்டிற்கு சென்ற அவரை செருப்பால் அடித்து, கைகளை கயிற்றினால் கட்டி வெளியே அழைத்து வந்து, அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து சம்பத்திடம் போலீஸார் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. சம்பத்தின் முதல் மனைவி மட்டும் இல்லாமல் அதன் பிறகு நான்கு பெண்களை ஆசை வார்த்தை கூறி சம்பத் திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி அவர்களுடன் குடும்பம் நடத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக படித்துவிட்டு வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் ஏழை பெண்களை குறிவைத்து சம்பத்து இதுபோன்ற மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. தற்போது சம்பத் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.