கணவரை தண்ணீர் தொட்டியில் அழுத்திக்கொலை செய்த மனைவி.. கள்ளக்காதலுக்காக பக்கா ஸ்கெட்ச்..!



Wife and Lover Arrested for Husband’s Murder in Rajasthan: Instagram Affair Turns Deadly

இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலுக்காக நடந்த ரணகொடூர சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சடலம் மீட்பு & விசாரணை:

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பர்மர் மாவட்டம், மால்புரா பாண்டா கிராமத்தில் இருக்கும் விவசாய நிலத்தில், கடந்த ஜூன் 04ம் தேதியன்று தேஜராம் (வயது 43) என்பவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இவர் ஜாலூர் மாவட்டத்தில் கட்டிட வேலை செய்து வந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதையும் படிங்க: காதல் கணவனை குடும்பத்துடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி.. அதிர்ச்சிதரும் காரணம்.!

Crime news

கள்ளக்காதல்:

இந்த விசாரணையில், தேஜாராமின் மனைவியான யூடியூபர் நேட்டல் (வயது 36) - மித்ரா கிராமத்தில் வசித்து வரும் டாக்சி ஓட்டுநர் குமான்சிங் (வயது 30) இடையே கள்ளக்காதல் உறவு இருந்தது அம்பலமானது. இவர்கள் இருவருக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. தேஜராம் வெளியூரில் வேலை பார்த்து வந்த நிலையில், மனைவியின் கள்ளக்காதல் அம்பலமானதால் பிரச்சனை எழுந்துள்ளது.

Crime news

மயக்க மருந்து கொடுத்து கொலை:

இதனால் கணவரை கொலை செய்ய திட்டமிட்ட மனைவி, தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். மனைவி குறித்து தகவல் அறியாத தேஜராம் பதறியபடி குமான் சிங்குக்கு தொடர்பு கொண்டுள்ளார். நேட்டலை இருவரும் சேர்ந்து தேடலாம் என நேரில் வரவழைத்த நிலையில், மதுவில் மயக்க மருந்து கொடுத்து விவசாய நிலத்தில் தண்ணீர் தொட்டியில் அழுத்தி கொலை செய்துள்ளனர். விசாரணைக்குப்பின் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 'என் நம்பரை பிளாக் பண்றியா' காதலனை வீடுபுகுந்து கதைமுடித்த காதலி.. பகீர் சம்பவம்.!