இளம் பெண்ணை கொலை செய்து கை கால்களை கட்டி ஏரியில் வீசி சென்றது யார்..?! போலீசார் விசாரணை...!!
உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுராவில் கோவர்தன் பகுதியில் உள்ள ஏரியில், நேற்று அடையாளம் தெரியாத இளம் பெண் ஒருவரின் உடல் அரை நிர்வாணமாக மிதந்தது.
இதைப் பார்த்த பொது மக்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைகள் மற்றும் கால்கள் தாவணியால் கட்டப்பட்டு முகம் ஜாக்கெட்டால் மூடப்பட்டிருந்த நிலையில் ஏரியில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
அதன் பின்னர் அந்த பெண்ணின் உடலை உடற்கூராய்விற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரி ஒருவர் உயிரிழந்த பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றுத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர், இளம் பெண்ணை கொலை செய்து ஏரியில் வீசியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.