ட்ரோனில் போதை பொருள் கண்டுபிடிப்பு... இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போலீஸ்சார் அதிரடி..!!



When the drone was searched, the police found 5 kg of heroin.

டிரோனை சோதனை செய்தபோது அதில் 5 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். 

பஞ்சாப் மாநிலம் டர்ன்தரான் மாவட்டத்தில் இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே வயல் வெளியில் டிரோன் ஒன்று கிடந்தது. அதனை காவல்துறையினர் கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது அதில் 5 கிலோ ஹெராயின் போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். 

இதுதொடர்பாக காவல் தலைமை இயக்குனர் சவுரவ் யாதவ் கூறும்போது, "5 கிலோ எடையுள்ள ஹெராயின் அடங்கிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஹெக்சாகாப்டர் டிரோனை காவல்துறையினர் கைப்பற்றினர் என்று கூறினார். அமிர்தசரஸ் மற்றும் டர்ன் தரான் மாவட்டங்களில் ஊடுருவிய இரண்டு பாகிஸ்தானின் டிரோன்களை கடந்த 28-ஆம் தேதி எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.