இந்தியா

ரயில் வரும் சில வினாடி முன்பு தண்டவாளத்தில் வீல்சேருடன் விழுந்த நபர்!! அடுத்து என்ன நடந்தது?? திக் திக் காட்சிகள்..

Summary:

நபர் ஒருவர் வீல்சேருடன் ரயில் தண்டவாளத்தில் விழுந்தநிலையில், ரயில் வர சில வினாடிகள் முன் அ

நபர் ஒருவர் வீல்சேருடன் ரயில் தண்டவாளத்தில் விழுந்தநிலையில், ரயில் வர சில வினாடிகள் முன் அவர் காப்பாற்றப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே நபர் ஒருவர் வீல் சேரில் சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறி வீல் சேறுடன் சேர்ந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளார். ரயில் வர சில வினாடிகளே இருக்கும் நிலையில், அங்கிருந்த பயணி ஒருவர் கீழே குதித்து, வீல்சேரில் சென்ற நபரை மீட்கிறார்.

பிளாட்பாரத்தில் இருந்த மற்ற பயணிகளும் அவருக்கு உதவி செய்ய, இறுதியில் அந்த நபர் ரயில் வருவதற்கு 10 வினாடிகள் முன்பு பத்திரமாக மீட்கப்பட்டார். தனது உயிரையும் பொருட்படுத்தாது அந்த நபரை காப்பாற்றிய அந்த நபருக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement