இந்தியா சமூகம்

பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்த வாலிபரை கட்டி அணைத்து கொலை செய்த வீரப்பெண்.!

Summary:

westbengal - malda - fire death

தன்னை பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து கொளுத்திய வாலிபரையே கட்டி அணைத்து கொலை செய்த வீரப்பெண்ணால் பெரும் பரபரப்பு.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டிற்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு இவர் வெளியில் சொல்லிவிடுவார் என்ற என்று பயந்த அவர் அந்த பெண்மணி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தி உள்ளார்.

இதனால் ஆவேசம் அடைந்த அப்பெண் எரியும் தீயோடு பாய்ந்து அந்த வாலிபரை கட்டி அணைத்து உள்ளார். இதனால் தீயானது அந்த வாலிபர் மீதும் பரவியது. அந்த வீட்டிலிருந்து வந்த புகை மூட்டத்தால் சந்தேகமடைந்த அருகில் இருந்தவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த போலீசார் பார்க்கும்போது அந்த வாலிபர் உடல் முழுவதும் தீப்பற்றி சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தார். பலத்த தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ள அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 


Advertisement