தனிமையில் உல்லாசம்... யூடியூபருடன் கள்ளக்காதல்.!! கணவனை கொலை செய்த சோசியல் மீடியா பிரபலம்.!!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூர நிகழ்வு தொடர்பாக அந்தப் பெண்ணை கைது செய்துள்ள காவல் துறையினர் தலைமறைவாக இருக்கும் அவரது கள்ளக்காதலனை தேடி வருகின்றனர்.
மது போதைக்கு அடிமையான கணவன்
ஹரியானா மாநிலம் பிவானி பகுதியைச் சேர்ந்தவர் ரவீனா. இவர் அப்பகுதியில் பிரபல யூடியூபராக இருந்து வருகிறார். இவரது யூடியூப் வீடியோக்கள் மிகவும் பிரபலம். இந்நிலையில் ரவீனாவுக்கு கடந்த 2017 ஆம் வருடம் பிரவீன் என்ற நபருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 6 வயதில் மகன் இருக்கிறார். மேலும் இவரது கணவன் பிரவீன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவரென தெரிகிறது. அவர் தினமும் குடித்துவிட்டு வந்து ரவீனா மற்றும் அவரது மகனை கொடுமை செய்துள்ளார்.
சோசியல் மீடியா பிரபலத்துடன் கள்ளக்காதல்
இந்நிலையில் ரவீனாவிற்கு, சுரேஷ் என்ற சோசியல் மீடியா பிரபலத்துடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. மேலும் அந்த நபர் ரவீனாவுடன் ஆறுதலாக இருப்பது போல் கள்ளத்தொடர்பில் இருந்து வந்திருக்கிறார். இது ரவீனாவின் கணவர் பிரவீனுக்கு தெரிய வரவே அவர்களது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: அட கொடுமையே... நிச்சயித்த பெண் கூட்டு பலாத்காரம்.!! மாப்பிள்ளை கண் முன் நடந்த கொடூரம்.!!
கழுத்தை நெறித்து கணவன் படுகொலை
இந்நிலையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி ரவீனா தனது கள்ளக்காதலன் சுரேஷுடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். அப்போது வீட்டிற்கு வந்த கணவர் பிரவீன் இதனைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். மேலும் ரவீனாவுடன் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. அப்போது ரவீனா மற்றும் அவரது கள்ளக்காதலன் சுரேஷ் சேர்ந்து பிரவீனை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை சாக்கு முட்டையில் கட்டி ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் வீசிவிட்டு எதுவும் நடக்காதது போல் வீடு திரும்பியிருக்கின்றனர். பிரவீனை சில நாட்களாக காணாததால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை நடத்திய விசாரணையில் இந்த கொடூர சம்பவம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ரவீனாவை கைது செய்துள்ள காவல் துறையினர் தலைமறைவாக இருக்கும் அவரது கள்ளக்காதலன் சுரேசை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: "9 வருஷமாச்சு ஒரு புழு, பூச்சி இல்ல..." குழந்தை இல்லாததால் ஆத்திரம்.!! இளம் பெண் படுகொலை.!! மாமியார் கைது.!!