அவரு இப்படித்தான் விளையாடுனாரு.. நாய் வீடியோவை வெளியிட்டு பங்கமாக கலாய்த்த ஷேவாக்!! வைரலாகும் வீடியோ!!virendra-shewag-shares-video-to-tease-newzland-captain

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மிகவும் மெதுவாக விளையாடியதை விமர்சித்து முன்னாள் வீரர் சேவாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகள் சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் மோதி வருகின்றன.ரிசர்வ் நாளான இன்று சமபலமிக்க இரு அணிகளும் மோதுவதால் இன்றைய போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 177 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் அவுட்டானார்.

இந்நிலையில் சுமார் 30 ஒவர்களை எதிர்கொண்டு வெறும் 49 ரன்களை மட்டுமே எடுத்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கென் வில்லியம்சன்னின் மெதுவான ஆமை வேக பேட்டிங்கை  விமர்சனம் செய்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் நாய் தூங்குவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.