இந்தியா விளையாட்டு

இந்திய அணியில் எனக்கு எப்போதுமே சிறந்த பார்ட்னர் இவர்தான்! விராட் கோலியின் ஓப்பன் டாக்!

Summary:

virat-talk-about-his-partner

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. சீனாவில் ஆரம்பித்த கொரோனவை சீனா அரசு தற்போது சற்று கட்டுப்படுத்தி வருகிறது.

கொரோனாவால், உலகமே முடங்கியுள்ள நிலையில் பல நாடுகளுக்கு சென்று விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி முக்கிய விளையாட்டு வீரர்களை தொடர்புகொண்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். 

இதனால் ரசிகர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க விளையாட்டு வீரர்கள் சமூகவலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் விளையாட்டு வீரர்கள். இதையடுத்து கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் பேசியுள்ளார்.

விராட்டுடன் பீட்டர்சன் நேர்காணலில் பேசுகையில், பேட்டிங்கில் தங்களது சிறந்த பார்ட்னர் யார் எனக் கோலியிடம் பீட்டர்சன் கேட்டார். அதற்குப் பதிலளித்த கோலி, "எனக்கு பொதுவாகவே வேகமாக ஓடுபவர்களை மிகவும் பிடிக்கும். அதுவும் ரன் எடுக்க முயலும்போது நம்முடன் ஆடும் பேட்ஸ்மேன் நம்மைச் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் தோனிதான் என்னுடைய சிறந்த பார்ட்னர். 

எங்கள் இருவரின் பேட்டிங் கூட்டணி இந்திய அணிக்காக நிறைய ரன்களை சேர்த்துள்ளது என விராட் தெரிவித்துள்ளார். 


Advertisement