சீருடையில் இருக்கும் பெண் அதிகாரியை சரம்வாரியாக தாக்கிய கிராம மக்கள்! வைரல் வீடியோ!

சீருடையில் இருக்கும் பெண் அதிகாரியை சரம்வாரியாக தாக்கிய கிராம மக்கள்! வைரல் வீடியோ!



village people beat women officer


தெலுங்கானா மாநிலத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் அனிதா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிர்பூர் அருகே உள்ள சரசலா கிராமத்திற்கு சென்று, அரசின் மரம் நடும் திட்டத்தின் படி அங்கு உள்ள சில இடங்களில் மரங்களை நடுவதற்காக அரசு நிலங்களை தேர்வு செய்துள்ளார்.

ஆனால், அதற்கு அந்த கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சனை செய்துள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினரின் சகோதரர் கிருஷ்ணா ராவ் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்து, வனத்துறை அதிகாரி அனிதா மற்றும் பிற அதிகாரிகளை சரமாரியாக தாக்கியுள்ளனர்.



 

அங்கு வந்தவர்கள் நீண்ட கம்புகளாலும், மரக்கட்டைகளாலும் வனத்துறை அதிகாரி அனிதா மற்றும் பிற அதிகாரிகளை தாக்கியதில் அனிதா சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கிருஷ்ணா கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து திரும்பிய அனிதா கூறுகையில், ஒரு பெண் என்று கூட பாராமல் என்னை இப்படி தாக்குவார்கள் என்று நான் நினைக்கவில்லை. சீருடையில் இருக்கும்போது என்னை அடிப்பார்கள் என்று நினைக்கவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.