ஐயோ... புள்ள எப்படி துடிச்சுருப்பான்..! விளையாடப்போன இடத்தில் 7 வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம்! பேருந்தின் ஹைட்ராலிக் கதவில் கழுத்து சிக்கி.... அதிர்ச்சி CCTV காட்சி!!!
குஜராத்தின் வடோதரா நகர புறநகர் பகுதியில் உள்ள வாகனப் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் ஹைட்ராலிக் கதவில் கழுத்து சிக்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தொழிலாள தம்பதியின் மகனான திவ்யேஷ் ரத்வா, புதன்கிழமை மாலை விளையாடச் சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடியபோது, சிறுவன் பேருந்தில் சிக்கியிருப்பது தெரியவந்தது.
பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய சிறுவன்
பணிமனைக்கு பின்புறம் உள்ள குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த திவ்யேஷ், வழக்கம்போல் மாலை நேரத்தில் விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர்.
அப்போது பணிமனையில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் சிறுவனின் கழுத்து சிக்கியிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். பேருந்து எந்த இயக்கமும் இல்லாமல் நிலையாக இருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக அதன் தானியங்கி ஹைட்ராலிக் கதவு மூடிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஹைட்ராலிக் கதவு இடையே சிறுவனின் கழுத்து சிக்கியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிசிடிவியில் பதிவான மீட்பு முயற்சி
சிறுவனை மீட்க பணிமனையில் இருந்த இருவர் உடனடியாக முயன்றனர். கதவை பலவந்தமாகத் திறந்து அவரை வெளியே கொண்டு வந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
சுயநினைவின்றி மீட்கப்பட்ட சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் திவ்யேஷ் ரத்வா உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை விசாரணை
சிறுவனின் உயிரிழப்பு குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை அதிகாரி அபிஷேக் குப்தா தலைமையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பேருந்தின் கதவு எவ்வாறு திடீரென மூடியது, பணிமனையில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது உள்ளிட்ட கோணங்களில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கிடுகிடுவென உயரும் சர்க்கரை விலை.. E20 பெட்ரோலால் தான் சர்க்கரை விலை உயர்ந்ததா? மத்திய அரசு விளக்கம்..!