உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு 24 மணிநேரம் கழித்து இறுதிச்சடங்கில் உயிர்த்தெழுந்த மூதாட்டி.. பதறிப்போன உறவினர்கள்.!



UttarPradesh women Awake After 24 Hrs Doctor Declare she Died

மருத்துவர்களால் உயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட பெண்மணி, இறுதிச்சடங்கில் திடீரென எழுந்து உட்கார்ந்ததால் உறவினர்கள் பதற்றத்திற்கு உள்ளாகினர்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரோசாபத்தை சேர்ந்த பெண்மணி ஹரிபேஜி (வயது 81). இவர் கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். 

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதியான ஹரிபேஜி, கடந்த 24 ஆம் தேதி மூளைச்சாவடைந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனால் அவரின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கிற்காக வைக்கப்பட்டது. வீட்டிற்கு வந்த 24 மணி நேரத்தில் அவரின் இறுதிச்சடங்கு அனைத்தும் நடைபெற்றது. 

UttarPradesh

அப்போது, திடீரென அவர் உயிர்த்தெழுந்ததாக தெரிய வருகிறது. இதனால் பதறிப்போன உறவினர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். 

மருத்துவர்கள் அவர் நலமுடன் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இன்று அவர் பூரண நலத்துடன் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.