தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நடனமாடி அவமதித்த இளைஞர்.. நண்பருடன் சேர்ந்து கம்பி எண்ணும் பரிதாபம்.!UttarPradesh men danced national song and arrested by police

நமது இந்திய திருநாட்டின் 74ம் குடியரசு தினவிழா கடந்த 26ம் தேதி சிறப்பிக்கப்பட்டது. இந்தியாவின் குடியரசு தினத்திற்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன. 

இந்தியர்கள் அனைவரும் குடியரசு தின விழாவை ஒற்றுமையுடன் சிறப்பித்தனர். இதற்கிடையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட்டை சேர்ந்த இளைஞர், தேசிய கீதத்தை அவமதித்து வீடியோ வெளியிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, அவரை கைது செய்ய கண்டனங்கள் குவிந்தன. இதனையடுத்து, மீரட் காவல் துறையினர் விசாரணையில் களமிறங்கி நண்பர்களான ரஹீல் , அத்நான் ஆகியோரை கைது செய்தனர்.