பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து 25 பேர் பலி.! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் இழப்பீடு.!

பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து 25 பேர் பலி.! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் இழப்பீடு.!



Uttarakhand accident

உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரை தொடங்கிய நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் இருந்து 28 பக்தர்களை ஆன்மீக சுற்றுலாப் பயணத்திற்காக ஏற்றிச் சென்ற பேருந்து உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாம்டா அருகே சென்ற போது அங்கிருந்த பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.

அந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 25 பக்தர்கள் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில காவல்துறை மற்றும் மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். பக்தர்கள் உயிரிழந்ததற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்றிரவு டேராடூனை அடைந்தார். அதன்பின்னர்,அதிகாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். உத்தரகாண்ட் விபத்து குறித்து வருத்த தெரிவித்துள்ள பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உத்தர காண்ட் விபத்தில் உயிரிழந்த பக்தர்களுக்கு, மத்திய பிரதேச அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.