பெண் அதிகாரியிடம் அலுவலகத்தில் பாலியல் சீண்டல்; குடிமைப்பணி அதிகாரியின் சர்ச்சை வீடியோ லீக்..!  Uttar Pradesh Shahjahanpur Municipal Civic Officer Molests Women Employee 

பணியில் இருந்தபோது அலுவலகத்தில் உடன் பணியாற்றும் பெண் அதிகாரியின் கையை பிடித்து இழுத்து, இடுப்பை தொட்டு பேசிய குடிமைப்பணி அதிகாரியின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜகான்பூர் நகராட்சி அலுவலகத்தில் குடிமைப்பணி அதிகாரியாக வேலை பார்த்து வருபவர் பாபு ஷபிக் என்ற கஃப்கார். 

இவர் சம்பவத்தன்று தனது அலுவலகத்தில் பணியாற்றி வந்த நிலையில், பணியில் இருந்த பெண்ணை அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். 

இதுகுறித்த அதிர்ச்சி வீடியோ அங்கிருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.