7 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம், கொலை.. கரும்புத்தோட்டத்தில் பயங்கரம்.!
மொராதாபாத்தில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் சடலம் 2 நாட்கள் கழித்து அழுகிய நிலையில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் அருகேயுள்ள கிராமத்தில் காய்கறி வியாபாரி தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது 7 வயது இளையமகள், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.
வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி திடீரென மாயமாகவே, சிறுமியின் தாயார் தனது மகளை தேடி பார்த்துள்ளார். மகளை எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால், கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்த தந்தை மகளை பல்வேறு இடங்களில் உறவினர்களுடன் தேடியுள்ளார்.
சிறுமி எங்கு தேடியும் காணாத காரணத்தால், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்களது கிராமத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கரும்பு தோட்டத்தில், துர்நாற்றம் வீசுவதை தோட்டத்தின் உரிமையாளர் உணர்ந்துள்ளார்.
துர்நாற்றம் எங்கு இருந்து வருகிறது என்று பார்க்கையில், சிறுமியின் சடலம் அங்கு இருந்துள்ளது. பின்னர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிடுகையில் மாயமானதாக கூறப்பட்ட சிறுமியின் சடலம் என்பது உறுதியானது. குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களும் தங்களின் மகள் தான் என்பதை உறுதி செய்தனர்.
பின்னர், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக காவல் துறையினர் அனுப்பி வைக்கவே, பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், கொடூர குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement