17 வயது சிறுமி பலாத்காரம்; வீடியோ எடுத்து நெட்டில் விட்ட நண்பர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

17 வயது சிறுமி பலாத்காரம்; வீடியோ எடுத்து நெட்டில் விட்ட நண்பர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!Uttar Pradesh meerut girl Rape 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில், பதின்ம வயது சிறுமி பலாத்காரம் செய்யப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகின. வீடியோ காவல் துறையினரின் கவனத்திற்கு சென்றதைத்தொடர்ந்து, அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் சாகிர் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய கொடுமை அம்பலமானது. 

இதனையடுத்து, இந்நிகழ்வில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளில் சாகிர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டது. கடந்த ஜூலை 23ல் உள்ளூரில் உள்ள சமூக வலைத்தளங்களில் தனது தங்கை பலாத்காரம் செய்யப்படும் விடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Uttar pradesh

புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமி கடந்த 3 மாதங்களுக்கு முன் தனது நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனை அவரின் நண்பர்கள் வீடியோ எடுத்து வைத்துள்ளனர். பின் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என தெரிவித்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார்.

இதனிடையே, சாஹிரின் நண்பர்கள் விடியோவை சமீபத்தில் இணையதளங்களில் பதிவு செய்ய, அவை வைரலாகி இருக்கின்றன. இதன்பின்னரே சிறுமி பலாத்காரம் தொடர்பான விஷயம் தெரியவந்து 3 பேர் கைது செய்ய்யப்ட்டுள்ளனர். எஞ்சியவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.