சிறுமி பலாத்கார வழக்கில் தப்பிக்க சாமியார் வேடம்... கயவன் சிக்கியது எப்படி?.. காவல்துறை அதிரடி.!



Uttar Pradesh Hardoi Minor Girl Rape Case Accuse Arrest in Ayodhya

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, துறவி வேடமிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த கயவன் கைது செய்யப்பட்டான்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹர்தோயின் சண்டிலா பகுதியில் 15 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இதே பகுதியில் அஜித் பிரதாப் சிங் என்ற 24 வயது இளைஞர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி 3 ஆம் தேதி அஜித் பிரதாப் சிங் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து தப்பி சென்றுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விஜய் பிரதாப் சிங்கை தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், அவர் எங்கு இருக்கிறார்? என்ற விபரங்கள் சரிவர கிடைக்காததால், வழக்கு தொய்வில் இருந்தது. 

இந்நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி அயோத்தியில் சாதுக்களுடன் துறவியாக வாழ்ந்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை காவல் துறையினர், நேற்று (மார்ச் 16) அஜித் பிரதாப் சிங்கை கைது செய்து ஹர்தோயி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். 

Uttar pradesh

அப்போது, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்ததை ஒப்புக்கொண்ட அஜித், அங்குள்ள சாதுக்களுடன் சேர்ந்து துறவிபோல வாழ்ந்து வந்ததையும் தெரிவித்துள்ளான். இதனையடுத்து, அஜித் பிரதாப் சிங்கை கைது செய்த காவல் துறையினர், ஜாமினில் வர இயலாத வகையில் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்துள்ளனர். 

இதுதொடர்பாக உள்ளூர் நிலவரங்கள் தெரிவிக்கையில், "கற்பழிப்பு குற்ற வழக்குகளில் சிக்கும் பலரும் இதனைப்போல சட்டத்தை ஏமாற்ற போலி துறவி வேடம் புகுவதாகவும், அதிகாரிகள் அவர்களை கண்டறிந்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்" என்று தெரிவித்தனர்.