சமோசா பிரியர்களுக்கு ஷாக்; தவளையுடன் பொறித்து வழங்கப்பட்டதால் அதிர்ச்சி.!
துரித உணவகங்கள், சாலையோர உணவககங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் மீண்டும்-மீண்டும் அதனை ருசித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அலாதியாக வழங்கும் தன்மை கொண்டவை ஆகும்.
இவற்றை சிற்றுண்டியாக கூட ஒருசிலர் எடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில், அவற்றின் தரம் என்பது மிகப்பெரிய அளவில் அவ்வப்போது சர்ச்சையை சந்தித்து வருகிறது. பல்லி, கரப்பான், பாம்பு, மனித விறல் போன்றவை அவ்வப்போது துரித உணவுகளுடன் பரிமாறப்பட்டு அதிர்ச்சி தந்துள்ளது.
இதையும் படிங்க: முற்றிப்போன ரீல்ஸ் மோகம்; இளம் தம்பதி, 3 வயது குழந்தை உடல் சிதறி பலி.!
சமோசாவில் தவளை
இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் நகரில் செயல்பட்டு வரும் பிணாக்கர் ஸ்வீட் ஸ்டாலில், உணவுப்பிரியர் ஒருவர் சமோசா வாங்கி சாப்பிட்டு இருக்கிறார். அதில் தவளையின் கால்கள் இருந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ந்துபோன வாடிக்கையாளர், ஆத்திரத்தில் கடையின் உரிமையாளரிடம் கடும் வாக்குவாதம் செய்தார். மேலும், உனவுப்பாதுகாப்புத்துறையினர் இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்தவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
गाजियाबाद, UP में समोसे के अंदर मेंढक की टांग निकली है। मामला बीकानेर स्वीट्स का है। पुलिस ने दुकानदार को कस्टडी में लिया। फूड विभाग ने सैंपल जांच को भेजे। pic.twitter.com/SBcsEs8nMr
— Sachin Gupta (@SachinGuptaUP) September 12, 2024
இதையும் படிங்க: வயலுக்குள் கவிழ்ந்த பெட்ரோல் லாரி; விபரீதம் புரியாமல் பெட்ரோலை பிடிக்க முண்டியடித்த மக்கள்.!