கணவரின் முதல் மனைவி மகன்களுடன் கள்ளக்காதல்.. தலையை வெட்டி முண்டமாக்கிய குடும்பம்.. முறைதவறிய உறவால் நடந்த பயங்கரம்.!

கணவரின் மூத்த மனைவி மகனுடன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்த பெண்மணி, கணவரால் கொலை செய்யப்பட்டார். ஒரு மகனுடன் உறவு வைத்தது போதாதென்று, மூவரையும் வலையில் வீழ்த்த நினைத்ததால் நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாந்தா கிராமத்தில் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவரின் தலையை தேடுகையில், அது பெண்ணின் உடல் இருந்த இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. பெண்ணின் கை விறலில் இருந்த நான்கு விரல்களும் வெட்டப்பட்டு இருந்தன. இந்த பெண்மணி யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? உடல் இங்கு கொண்டு வரப்பட்டது எப்படி? என்பது தொடர்பான விசாரணையில் அதிகாரிகள் களமிறங்கினர்.
விசாரணையில், கொலையான பெண்மணி மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷட்டர்பூர் மாவட்டம் பாக்ரா கிராமத்தில் வசித்து வரும் ராம்குமார் அக்ரிவார் என்பவரின் மனைவி மாயாதேவி என்பது உறுதியானது. அவரது குடும்பத்தினர் இது மாயாதேவியின் உடல் தான் என்பதை உறுதி செய்தனர்.
முதல் கட்ட விசாரணையில் கணவர் ராம்குமார் அவரது மகன் சூரஜ் பிரகாஷ், பிரிஜேஷ், மருமகன் உதய்பான் ஆகியோர் சந்தேக வலையில் சிக்கி பின் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
ராம்குமாரிடம் விசாரணை நடத்துறையில், அவர் மாயாதேவி எனது இரண்டாவது மனைவி. அவருக்கு மகன்களுடன் முறையற்ற தொடர்பு இருந்தது. பிற மகன்களையும் அவர் தனது வலையில் வீழ்த்த நினைத்தார். இதனால் அவரை கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், சித்தியின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த பிற நபர்களும், மாயாதேவியை ஜிப்பில் ஏற்றி உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாந்தா கிராமத்திற்கு அழைத்து சென்று, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கோடாரியால் கழுத்தை வெட்டி கொலை செய்து உடலை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர். இந்த கொலைக்கு பயன்படுத்திய கோடாரியும் அவர்களின் காரில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.