இந்தியா

பூட்டியிருந்த வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்பு!

Summary:

Uthiraparadash

உத்திர பிரதேச மாநிலத்தில் நான்கு நாட்களாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே உள்ளே சென்று பார்த்த போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் ஃபதேபூரின் சாந்திபூர் பகுதியை சேர்ந்தவர் ஷியாமா. இவர் தனது நான்கு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். ஷியாமாவின் கணவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்.

இவர் தினமும் குடித்து விட்டு வந்து ஷியாமாவிடம் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டவர். ஒரு குடித்து வந்த ஷியாமாவின் கணவர் பயங்கரமாக சண்டையிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். அன்றிலிருந்து நான்கு நாட்களாக வீடு பூட்டி கிடந்துள்ளது.

நான்கு நாட்கள் கழித்து பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.போலீசார் வந்து பார்த்த போது அங்கு ஷியாபாவும் அவரது நான்கு மகள்களும் சடலமாக கிடந்துள்ளனர்.

இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நிகழ்வு ஒரு கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement