இந்தியா

ஏங்க..!! இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு..! இம்புட்டுக்கும் அந்த எலிதான் காரணமா..!! எலி மீது பழி போட்ட போலீசார்..

Summary:

அட்டைப்பெட்டிகளில் இருந்த கள்ளச்சாராய பாட்டில்கள் மாயமானதற்கு எலிகள்தான் காரணம் எனக் கூறிய

அட்டைப்பெட்டிகளில் இருந்த கள்ளச்சாராய பாட்டில்கள் மாயமானதற்கு எலிகள்தான் காரணம் எனக் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், இட்டா மாவட்டத்துக்கு உட்பட்ட கோட்வாலி தெகாட் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையம் ஒன்றில் போலீசார் கள்ளச்சாராய பாட்டில்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். சுமார் 1400 அட்டைப்பெட்டிகளில் இருந்த கள்ளச்சாராய பாட்டில்கள் இந்த காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்துள்ளது.

இந்நிலையில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய அட்டைப்பெட்டிகளில் 239 அட்டை பெட்டிகளில் இருந்த கள்ளச்சாராய பாட்டிகள் அனைத்தும் காணவில்லை என உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து உயரதிகார்கள், கோட்வாலி தெகாட் காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், அனைத்து பாட்டில்களையும் அங்கிருந்த எலிகள்தான் சேதப்படுத்தியதாக காவல்நிலைய குறிப்பேட்டில் எழுதிவைத்துள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மூத்த அதிகாரிகள், கோட்வாலி தெகாட் காவல் நிலைய ஆய்வாளர் இந்ரேஷ்பால் சிங் மற்றும் கிளார்க் ரிஷால் சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு விசாரித்துவருகின்றனர். போலீசார் பறிமுதல் செய்த கள்ளச்சாராய பாட்டில்கள் என்ன ஆனது? எங்கே போனது என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் கள்ளச்சாராய பாட்டில்களை எலிகள் தூக்கி சென்றதாக கூறும் சம்பவம் நாடு முழுவதும் கடும் வைரலாகி பல்வேறு விமர்சங்களை எழுப்பியுள்ளது.


Advertisement