நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
காதலியை பார்க்கச்சென்ற இளைஞர் பெண் வீட்டாரால் அடித்தே கொலை; பரபரப்பு சம்பவம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஜியாபாத் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் இளைஞருடன் காதல் வயப்பட்டுள்ளார். சம்பவத்தன்று காதலன் பெண்ணை ரகசியமாக சந்திக்க இரவு நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள் இளைஞரை கண்டுவிட அவரை வீட்டில் கடுமையாக தாக்கியிருக்கின்றனர். இதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்களை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இளைஞர் திருட வந்ததாகவும் இதனால் தாங்கள் தாக்கியதாகவும் கூறிய நிலையில், தீவிர விசாரணைக்கு பின்னர் உண்மை அம்பலமானது.