சாலையில் நடந்துசெல்லும்போதே மாரடைப்பால் நொடியில் பிரிந்த உயிர்; 22 வயது இளைஞர் மரணத்தின் அதிர்ச்சி காட்சிகள் உள்ளே.!



UP Lakimbur Kheri Man Died On Roadside by Heart Attack 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் வசித்து வருபவர் சுமித் மௌரியா (வயது 22). இவர் சம்பவத்தன்று அங்குள்ள கடைவீதி பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். 

அச்சமயம், அவர் நடந்து சென்றவாறே மயங்கி சரிந்து உயிரிழந்தார். அவர் முதலில் வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்ட நிலையில், சிசிடிவி கேமிராவை பார்த்தபோது அதிர்ச்சி காட்சி காத்திருந்தது. 

அதாவது, சுமித் சாலையில் சென்றுகொண்டு இருந்தபோதே, திடீரென மயக்கம் ஏற்பட்டு சரிந்து விழுந்து இருக்கிறார். அவர் சுயநினைவு இன்றி இருந்ததால், உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுமித் மாரடைப்பால் உயிரிழந்ததை உறுதி செய்தனர். காவல் துறையினர் அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.