கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
ஆபாச படத்தை பார்த்து, சொந்த தங்கையை கற்பழித்து கொன்ற 19 வயது சகோதரன்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காஷ்கன்ச் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது சிறுவன் சஞ்சு. இவருக்கு சொந்த தங்கை இருக்கிறார்.
செல்போனில் ஆபாச படம் பார்த்து பழகிப்போன சஞ்சு, சம்பவத்தன்று தனது தங்கையை பலவந்தமாக வீட்டிற்குள் பலாத்காரம் செய்துள்ளார்.
அம்மா வீட்டிற்கு வந்ததும் உன் செயல் குறித்து கூறுகிறேன் என தங்கை அண்ணனை கண்டித்து இருக்கிறார். இதனால் சஞ்சு தான் மாட்டிகொள்வோமோ என அஞ்சி இருக்கிறார்.
பயத்தில் தனது தங்கையின் கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கிறார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியின் நிலையை கண்டு உண்மையை உணர்ந்து இருக்கின்றனர்.
தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சஞ்சு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.