பெற்ற மகளை துடிதுடிக்க கொன்ற தந்தை…! வில்லியாக இருந்த சித்தி... பேத்திக்காக 2 வருடம் போராடி வென்ற தாத்தா…. பகீர் பின்னணி…!!!



up-gonda-girl-murder-life-sentence

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில் சொந்த மகளை கொலை செய்த தந்தைக்கும், கொலைக்கு உடந்தையாக இருந்த சித்திக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு நடந்த கொடூர கொலை வழக்கில், இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற சட்டப்போராட்டத்துக்கு தற்போது தீர்ப்பு கிடைத்துள்ளது. உயிரிழந்த சிறுமி ஸ்வேதாவுக்கு நீதி கிடைத்திருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சொந்த மகளை கொன்ற தந்தை

கோண்டா பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது சொந்த மகள் ஸ்வேதாவை கடந்த 2024-ம் ஆண்டு கொடூரமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொலையில் ராஜேஷின் இரண்டாவது மனைவியும், சிறுமியின் சித்தியுமான கிரணும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்பட்டது.

இதையும் படிங்க: இது என்ன புது அட்டூழியம்... மனு கொடுக்க வந்த பெண்களுக்கு அதிர்ச்சி கொடுத்த எம்.எல்.ஏ..! கோபத்தில் கொந்தளித்த முதல்வர்...!!!

பேத்தியின் மரணத்தை அறிந்த தாய்வழி தாத்தா, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவர் மீதும் சட்ட நடவடிக்கை தொடங்கியது. தனது பேத்திக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அவர் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தினார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிப்பு; இருவருக்கும் ஆயுள்

வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், ராஜேஷ் மற்றும் கிரண் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இதையடுத்து, பெற்ற மகளை கொலை செய்த ராஜேஷுக்கும், அதற்கு உடந்தையாக இருந்த கிரணுக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இரண்டு ஆண்டுகளாக நடந்த சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், ஸ்வேதாவின் குடும்பத்தினர் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

 

இதையும் படிங்க: இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க கூடாது! குழந்தைகளைப் பத்திரமா பாத்துக்கோங்க... வீட்டிற்கு வந்ததும் கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு!வி அதிர்ச்சி சம்பவம்!!!