ஒரே மணமேடையில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 2 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! காரணம் தெரிந்தால் கடுப்பாயிடுவீங்க.! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா லைப் ஸ்டைல்

ஒரே மணமேடையில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 2 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! காரணம் தெரிந்தால் கடுப்பாயிடுவீங்க.!

இரண்டு வெவ்வேறு குடும்பங்களை சேர்ந்த பெண்களை இளைஞர் ஒருவர் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்ட சம்பவம் வைரலாகிவருகிறது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் பேடால் பகுதியில் உள்ள கெரியா என்ற கிராமத்தில் கடந்த 8 ஆம் தேதி திருமணம் ஒன்று நடந்துள்ளது. உற்றார் உறவினர்கள் புடைசூழ, மணமகன் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டும் அந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது.

குறிப்பிட்ட புகைப்படம் வைரலானதை அடுத்து மாவட்ட நிர்வாகம் இந்த திருமணம் குறித்து விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், மணமகன் படிக்கும்போது ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்துள்ளனர். அதேநேரம் அந்த இளைஞரின் பெற்றோர் அவருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய பேசி முடித்துள்ளனர்.

அதன்பிறகு இளைஞரின் காதல் விவகாரம் அனைவர்க்கும் தெரியவர, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளனர். இதனிடையே யாரு கொடுத்த யோசனை என தெரியவில்லை, இரண்டு பெண்களையும் அந்த இளைஞருக்கே திருமணம் செய்துவைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இதற்கு இரண்டு பெண்களும், அவர்களது குடும்பமும் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அனைவரின் சம்மதத்துடன் சந்தீப் என்ற அந்த இளைஞர் ஒரே மேடையில் இரண்டு பெண்களுக்கும் தாலி கட்டி தனது மனைவியாகியுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo