அடப்பாவாமே... அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்.!! மர்ம நபருக்கு வலைவீச்சு.!!



unidentified-man-poisoned-primary-school-water-tank-pol

ஆந்திர மாநில துவக்க பள்ளியின் குடிநீர் தொட்டியில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விஷம் கலக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்ணீர் தொட்டியில் கலக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து

ஆந்திர மாநிலம் அடிலாபாத் பகுதியில் அமைந்துள்ள அரசு துவக்க பள்ளியின் வகுப்பறையில் பூச்சி மருந்து டப்பா கிடப்பதை கண்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் யாரும் தண்ணீர் தொட்டியை பயன்படுத்த வேண்டாம் என தலைமையாசிரியர் அறிவுறுத்தினார்.

India

காவல்துறையில் புகார்

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவை கைப்பற்றினர். மேலும் தண்ணீர் தொட்டியை பரிசோதித்ததில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்றும் பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: "மயக்கத்தில் இருந்தாலும் வலியை உணர்ந்தேன்..." வென்டிலேட்டரில் கூட்டு பலாத்காரம்.!! ஊழியர்கள் கைது.!!

போலீஸ் விசாரணை

காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் பள்ளியின் குடிநீர் தொட்டியில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்தது தெரிய வந்திருக்கிறது. மேலும் என்ன காரணத்திற்காக பள்ளியின் குடிநீர் தொட்டியில் பூச்சி மருந்து கலக்கப்பட்டது என தெரியவில்லை. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் விரைவாக செயல்பட்டதால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தனிமையில் உல்லாசம்... யூடியூபருடன் கள்ளக்காதல்.!! கணவனை கொலை செய்த சோசியல் மீடியா பிரபலம்.!!